Akilamum Neeye Song Lyrics-Murugan Song Lyrics 

Akilamum Neeye Song Lyrics in Tamil Murugan Songs Album “Theertham”.The song is sung by S P Balasubramaniam and the music is composed by Kishore Kumar.
Akilamum Neeye Lyrics is penned down by “Kaviya”.Production Vijay Musicals.Tamil Devotional | Lyrical Video | Lord Muruga | kanda sasti viratham

Song Credits

  • Song : Akilamum Neeye
  • Album : Theertham
  • Singer : S P Balasubramaniam
  • Lyrics : Kaviya
  • Music : Kishore Kumar
  • Production : Vijay Musicals
  • Video Powered : Kathiravan Krishnan
Akilamum Neeye Song Lyrics-Murugan Song Lyrics 

Akilamum Neeye Lyrics Tamil

அகிலமும் நீயே சகலமும் நீயே
ஆறுபடை வீடுகொண்ட ஆண்டவனே

உன்னை பாதம்வரை நான் வணங்கி
வேண்டி வேண்டுகிறேன்

அகிலமும் நீயே சகலமும் நீயே
ஆறுபடை வீடுகொண்ட ஆண்டவனே

உன்னை பாதம்வரை நான் வணங்கி
வேண்டி வேண்டுகிறேன்

முருகா வரவேண்டும் அருள் தரவேண்டும்
சரவணபவ சொல்லி உருகுது மனமே

அகிலமும் நீயே சகலமும் நீயே
ஆறுபடை வீடுகொண்ட ஆண்டவனே

உன்னை பாதம்வரை நான் வணங்கி
வேண்டி வேண்டுகிறேன்

Music….

பரிவோடு பாசம் அன்பினை ஊட்டும்
அன்னையை நீ எனக்கு கொடுத்தாய்

நெறியோடு வாழ நல்வழிகாட்டும்
தந்தையை உலகில் நீ கொடுத்தாய்

தாய்வழி தந்து தங்கிடும் நல்ல துணைவியை
இங்கு நீ கொடுத்தாய்

யாழ்குழல் தோற்கும் வகையிலே
கொஞ்சும் குழந்தைகள் தம்மை நீ கொடுத்தாய்

குழல் தந்தாய் உயிர் தந்தாய்!
விழிரெண்டில் உயிர் தந்தாய்!

நலம் தந்தாய் வளம் தந்தாய்!
நிலையான மதி தந்தாய்!

சரவணபவ சொல்லி உருகுது மனமே!!

அகிலமும் நீயே சகலமும் நீயே
ஆறுபடை வீடுகொண்ட ஆண்டவனே

உன்னை பாதம்வரை நான் வணங்கி
வேண்டி வேண்டுகிறேன்

Music…..

திருவாசல் தோறும் அருள்கீதம் ஓதும்
குழந்தைவேல் உன்னை நான் தொழுவேன்

மறவாமல் வெற்றிமலைபோல் அருளும்
தணிகைவேல் தன்னை நான் மறவேன்

படைவீடு கொண்ட கதிரேசன் புகழை
திசையாயும் சென்று சேர்த்திடுவேன்

மயிலேறி கந்தன் விளையாடும் அழகை
மனதார பாடி மகிழ்ந்திடுவேன்..

பாலாலே அபிஷேகம் பட்டாடை அலங்காரம்
பாலாட்டி கற்பூரம் கண்டாலே ஆனந்தம்..

சரவணபவ சொல்லி உருகுது மனமே!!

அகிலமும் நீயே சகலமும் நீயே
ஆறுபடை வீடுகொண்ட ஆண்டவனே

உன்னை பாதம்வரை நான் வணங்கி
வேண்டி வேண்டுகிறேன்

முருகா வரவேண்டும் அருள் தரவேண்டும்
சரவணபவ சொல்லி உருகுது மனமே

அகிலமும் நீயே சகலமும் நீயே
ஆறுபடை வீடுகொண்ட ஆண்டவனே

உன்னை பாதம்வரை நான் வணங்கி
வேண்டி வேண்டுகிறேன்……….

பாடல் : அகிலமும் நீயே
ஆல்பம் : தீர்த்தம்
பாடியவர் : S P பாலசுப்ரமணியம்
இயற்றியவர் : காவியா
இசை : கிஷோர் குமார்
தயாரிப்பு : விஜய் மியூஸிக்கல்ஸ்
தொகுப்பு : கதிரவன் கிருஷ்ணன்
தமிழ் பக்தி பாடல்கள் | பாடல்வரிகள் வீடியோ | தமிழ் கடவுள் முருகன்

அகிலமும் நீயே | Akilamum Neeye | Video Song Vijay Musicals

Leave a Comment